சித்த
வைத்தியர்களின் பார்வைக்கு மட்டில்........
தயவு செய்து
இந்த பகுதியை பார்வை யிட்டு இங்கு குறிப்பிடும் மருந்துகளை நோயர்கள் தாங்களே
சுயமாக பயன்படுத்தவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தோல் வியாதி (இரத்தம் மாசுபட்டதால்)
பெரும்பாலும் எங்களது லெக்ஷ்மணன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு இரத்தம் மாசுபட்டதால்தான் (துர்நீரால்) இந்த தோல்
வியாதி என்று தீர்மானித்துவிட்டால் அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் எங்கள்
பாரம்பரிய மருந்து என்ன என்றால் எங்களது வைத்தியசாலையின் தன்னிகரற்ற மருந்தான “மகா சர்வமேக ராஜாங்க எண்ணை” மற்றும் “இரச சுரோணித பற்பம்” ஆகிய மருந்துகளை அக (உள்) மருந்தாகவும் எங்களது “காரிக்க நிவாரணித் தைலம்” அதை புற (வெளி) மருந்தாகவும் கொடுத்து, 65 ஆண்டுகளாக நல்ல பெயர்
பெற்று வருவதை பெருமையுடன் தங்கள்முன் கூறிக்கொள்கிறோம்.
இதில் எங்கள் “மகா சர்வமேக ராஜாங்க எண்ணை”யானது இரத்த சுத்திக்கான பேதி மருந்தாகும். இந்த விசேஷ
மருந்து 5 நாள் அல்லது 7 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட சொல்லிக் கொடுப்போம். இது ஒரு
நாளைக்கு 15 தரத்துக்கு குறையாது பேதியடையச் செய்யும். இதனால் எந்த சோர்வோ மயக்கமோ
கண்டிப்பாக இருக்காது. பல சித்த மருத்துவர்கள், மற்றும் மாற்றுமுறை மருத்துவர்களான
அலோபதி மருத்துவர்கள் கூறுவதுபோல் 3 அல்லது 4 தரத்துக்கு மேல் பேதியானால் உடலில்
நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடைவர் என்று கூறுவோர் உண்டு. இது முற்றிலும் தவறே.
நோய்த் தொற்றினால் பேதி அடையும் ஒருவர்தான் 2 அல்லது 3 தரம் பேதி ஆனாலே உடன் உடல்
தளர்ந்து மயக்கமுறுவர்.
எங்களது வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக
எங்களது பாரம்பரியத்தில் பலவகை மூலிகைச் சாறுகள், மற்றும் சம்பை சரக்குகள் கொண்டு
ஆத்மார்த்தமாக தயாரிக்கப்பட்டு வரும் “மகா சர்வ மேக ராஜாங்க எண்ணை” மிக்க்குறைந்த பட்சம் 50,000 நோயர்களுக்கு
பலதரப்பட்ட வியாதிகளுக்குக் கொடுக்கப்பட்டு 80 சதவிகித நோயர்கள் பூரண சுகம்
பெற்று இருப்பதை செருக்குடன்
தெரிவித்துக்கொள்கிறோம். மீதம் உள்ள 20 சதவிகிதத்தினரும் எந்தவித பாதிப்பும் அடையவில்லை
என்பதையும் இங்கு பதிவுசெய்ய கடமைப்பட்டுள்ளோம். இரத்தம் சுத்தம் ஆனால் கண்டிப்பாக
தோல் சுத்தம் ஆகும். இதற்கு பேதி மருந்து அவசியம்.
நாம் நிர்ப்பந்தித்து நமது
உயர்வான பேதி மருந்தை சாப்பிடும்போது இரைப்பை மற்றும் டியோட்னம் வழியே பயணித்து சிறுகுடலை
அடையும்போது அங்குள்ள குடல் வழியாக சென்று இரத்தத்தில் கலந்ததும் பேதியாக
ஆரம்பிக்கும். உடலுக்கு உபாதை தராது பேதியாக
ஆரம்பிக்கையில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று
பார்ப்போம், முதலில் குடலுறிஞ்சிகளை செம்மை
செய்யும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை (துர்நீர்களை) பேதியாவதன் மூலம் வெளியேற்றும்.
இதுசமயம் உடலில் ஏற்படும் மிகப்பெரிய செயல்பாடுதான் வியாதியை நம் உடலில் இருந்து பூரணமாக
வெளியேற்ற உதவுகிறது. அதாவது, பாதி அளவிலோ முழு அளவிலோ செயல்படாது இருக்கும்
நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் நல்ல முறையில் தூண்டப்பட்டு செவ்வனே செயல்பட ஆரம்பிக்கின்றன.
அடுத்து சாப்பிடும் நமது “இரச சுரோணித பற்பம்” வியாதியால் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றி புது
செல்கள் உற்பத்தியாக உதவுகிறது.
இந்த பற்பம் சாப்பிடும்போது
இரவில் உபயோகிக்கும் புற மருந்தான “காரிக்க நிவாரணி தைலம்” அதை மேற்பூச்சாக உபயோகிக்கும்போது நமது தோல் மீது உள்ள
பூஞ்சைகளை முற்றிலும் அழிக்கிறது.
இந்த நோயர்க்கு 6 மாதமாக
அல்லது 1 வருடமாக தோல் வியாதி இருப்பின் மேற்கண்ட மருந்து 1 செட் சாப்பிட்டாலே
பூரண சுகம் காணலாம். 10 வருடங்களாக இருக்கும் வியாதியஸ்தர்களாக இருப்பின் 12 செட்டுக்கு
குறையாது சாப்பிட பூரண சுகம் காணலாம்.
தோல் வியாதி (சத்து பற்றாக்குறையால்)
தோல் வியாதி என்று வரும் நோயர்க்கு
மேல் அரிப்பு இருக்குமே அன்றி அரிப்பு உள்ள இடத்தில் தண்டிக்கும், ஆனால் காயம்
புண் தடித்த படை இருக்காது. ஆனால் தோல் சொரசொரப்பாக இருக்கும், நோயரும் பசி இல்லை
என்றும் சாப்பாடு கம்மியாக செல்கிறது என்றும் கூறுவர். சற்று சோகை போன்றும் இருப்பர்.
இந்த பிரிவினரை சத்து பற்றாக்குறைதான் என்று தீர்மானித்து அதற்கேற்ற மருந்துகளை
கொடுத்து சுகப்படுத்துவோம்.
இப்படி இருப்பவர்களுக்கு
நாங்கள் எங்கள் வைத்திய சாலையின் தயாரிப்பான “உஷ்ண நிவாரணி எண்ணை”, “அமிர்த சஞ்சீவி லேகியம்” மற்றும் “சர்வரோக சஞ்சீவி பற்பம்” ஆகிய மருந்துகளை உள் மருந்தாகவும், கொடுத்து மேலுக்கு
தேய்த்து குளிக்க ஓர் முறையையும் சொல்லி அனுப்பி வைப்போம்.
இதில் எங்களது “உஷ்ண நிவாரணி
எண்ணை” ஆமணக்கு
எண்ணையில் பல மூலிகைகளின் சாறுகளை பாரம்பரிய முறைப்படி குறிப்பிட்ட காலம் வரை ஊறவைத்து
காய்ச்சி எடுக்கப்படும். இதில் போதுமான அளவில் சோற்றுக் கற்றாழை சேர்க்கப்பட்டிருப்பதால்
நமது உடலில் நீர்ம சத்தால் அதிகம் பெருத்துள்ள செல்களில் இருக்கும் தேவையற்ற நீர்களை
வெளியேற்றி சுருங்கச் செய்கிறது.. இந்த செயலால் குடல் உறிஞ்சிகள் செப்பனிடப்பட்டு,
உணவின்மூலம் கிட்டும் சத்துகள் முழுமையாக இரத்தத்தில் கலக்க வழிவகைசெய்யும். இதனால்
உடலில் உள்ள உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள கசடுகள் நீக்கப்பட்டு செரிமானம்
அதிகரிக்கிறது.
இதன் பின் சாப்பிடப்படும்
எமது “அமிர்த சஞ்சீவி லேகியம்”- அதில்
தங்களால் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளாது விட்ட காய்கறி கீரை வகைகளின் மருத்துவ
உட்பொருட்களை அதன் இயல்பு கெடாது பிரித்து எடுத்து சேர்த்திருப்பதால் நம்
உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் மற்றும் மினரல்கள் எளிதாக குடலுறிஞ்சிகளை
கடந்து இரத்தத்தில் சேர்ந்து நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை இயல்பு நிலைக்கு கொணர்கிறது.
லேகியத்துடன் சாப்பிடும்
எமது “சர்வரோக சஞ்சீவி பற்பம்”–ஆனது உடலில் உள்ள சர்வ ரோகத்தையும்
(வியாதியையும்) விரட்ட வல்லது.
எங்களது இந்த லேகியம் மற்றும்
பற்பம் சாப்பிடும் தினங்களில் காலை குளிக்கும் பொழுது கீழ்கண்டபடி எங்களால்
குறிப்பிடப்படும் பொருட்களை சேகரித்து முடிந்தவரை அம்மியில் வைத்து அரைத்து நீர்
விட்டு குழைத்து உடல் பூராவும் தேய்த்து 5 நிமிடம் அப்படியே இருந்து பழக்கப்படி
பழக்கமான நீரில் குளித்துவர பூரன சுகம் காணலாம்.
குளிக்க அரைக்க
வேண்டிய சரக்குகள்
வேப்பங்கொழுந்து 1 கைபிடி அளவு
குப்பை மேனி இலை 1 கைபிடி அளவு
அருகன் புல் 1 கைபிடி அளவு
பச்சரிசி 1 கைபிடி அளவு
பச்சை பயிறு 1 கைபிடி அளவு
தேங்காய் பத்தை 1 துண்டு
கரி மஞ்சள் 1 சிறு துண்டு
தினம்
புதியதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.