தயவு செய்து இந்த பகுதியை பார்வை யிட்டு இங்கு குறிப்பிடும் மருந்துகளை நோயர்கள் தாங்களே சுயமாக பயன்படுத்தவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மூல வியாதி (உஷ்ண மிகுதியால்)
பெரும்பாலும்
எங்களது லெக்ஷ்மணன்
வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு உஷ்ண மிகுதியால் இந்த மூல வியாதி
என்று தீர்மானிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் எங்கள் பாரம்பரிய
மருந்துகளான “சர்வ மூல ரோக எண்ணை”. “குமரி
லேகியம்”, மற்றும் “சர்வரோகசஞ்சீவி
பற்பம்” ஆகிய மருந்துகளை அக (உள்) மருந்தாக
கொடுத்து, 65 ஆண்டுகளாக நல்ல பெயர் பெற்று வருவதை பெருமையுடன் தங்கள்முன் பதிந்துகொள்கிறோம்.
எங்களது “சர்வமூலரோக
எண்ணை” ஆமணக்கு
எண்ணையில் பல மூலிகைச்சாறுகளை பாரம்பரிய முறைப்படி குறிப்பிட்ட காலம் வரை ஊறவைத்து
காய்ச்சி எடுக்கப்படுகின்றது. இதில் போதுமான அளவில் சோற்றுக் கற்றாழை
சேர்க்கப்பட்டிருப்பதால் ஆசன வாயில் மூல வெளிப்பாட்டினால் இருக்கும் வீக்கத்தில் இருக்கும் சதை செல்களை இதமாக சுருங்க்ச்செய்து
சொல்ல இயலாத கொடுமையில் இருந்து வியத்தகு வண்ணம் விடுபட செய்யும்.
இந்த எங்களது எண்ணையினை 12
நாள் சாப்பிட்டு முடிப்பதற்குள் சுகம் பெறுவது திண்ணமே ஆயினும் திரும்ப வராது இருக்க
எங்களது பாரம்பரிய “குமரி லேகியம்”, மற்றும் “சர்வரோகசஞ்சீவி
பற்பம்” ஆகிய மருந்துகளை 20 நாள் 40 வேளை சாப்பிட பூரண சுகம் பெறுவது
திண்ணம்.
மருந்து முடிந்து சுகம்
அடைந்த பிறகு, இனி இந்த வியாதி வராது என்று வாளாதிருக்கக்கூடாது. திரும்ப வராது
இருக்க கீழ்கண்டவற்றில் இருந்து வழுவாது இருத்தல் அவசியம்.
v
தினசரி உணவில் ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு
காய்கறி மற்றும் கீரை வகைகள் சேர்த்துக்கொள்ளல் அவசியம்.
v
மன கவலை அறவே கூடாது.
v
உஷ்ணமான பதார்த்தங்களை முற்றிலும் தவிர்ப்பது
நலம். அப்படி இயலா காலங்களில் அதே தினம் சம அளவு குளிர்ச்சியான
பதார்த்தங்கள் சேர்த்துக்கொள்வது அவசியம்.
v
அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் அதில் நிறைய
காய்கறிகள் சேர்த்துக்கொள்வது அவசியம்.
v
புகையிலை மற்றும் போதைப் பழக்கம் இருப்பின்
முற்றிலும் தவிர்த்தல் அவசியம். (பீர் உட்பட)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக